Monday, December 13, 2010


I AM SAM

அன்பு செலுத்த பணம்,துணிவு,அழகு,அறிவு இப்படி எதுவும் தேவை இல்லை என்பதை உணர்த்தும் விதமாக பல திரைப்படங்கள் வந்துள்ளன..சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த இதனை நாள் பார்க்காமல் விடுத்த ஆங்கில திரைப்படம் "I am Sam" ...2003 ஆம் வருடத்தில் வெளிவந்த படம்..இதனை நாள் கழித்து நான் பார்க்க உதவிய "வெப்துனியா.காம்" கு நன்றி....எனக்கு பிடித்த இந்த திரைப்படம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு எழுதுகிறேன்...என் விமர்சனம் உங்களை கவர்ந்தால் படத்தை பாருங்கள்...பிடிக்க வில்லை என்றாலும் படத்தை பாருங்கள்..என் தப்பான விமர்சனத்திற்காக ஒரு நல்ல
படத்தை இழந்து விடாதீர்கள்........

7 வயது அறிவுடன் குழந்தைத்தனமான ஆடிசம் எனும் மன மாறுதல் கொண்ட 32 வயது ஆண் dawson . காபி ஷாப் - இல் பணி புரியும் இந்த கதாநாயகன் வேகமாக மருத்துவமனை நோக்கி செல்கிறான்..அங்கு அவன் மனைவி அழகான பெண் குழந்தையை பிரசவிக்கிறாள்...கணவன் மீது கொண்ட வெறுப்பு, குழந்தையை பார்க்க கூட விருப்பமில்லாமால் இருவரையம் விட்டு விலகி செல்கிறாள்...கையில் குழந்தையுடன் ஒரு குழந்தைத்தனம் கொண்ட தந்தை...இப்படி ஆரம்பிக்கிறது கதை...

குழந்தை வளர வளர தந்தையை விட சிறுமி மிகுந்த அறிவோடு வளருகிறாள் ...தந்தை மீது தீராத பாசம்...தந்தையோ தன மகளை ஒரு பூப்போல் பாதுகாக்கும் ஒரு நல்ல குழந்தை...மகள் 7 வயதை நெருங்கும்போது அவளை வளர்க்க அத்தந்தை அருகதை அற்றவன் என அப்பிள்ளையை எடுக்கிறார்கள் குழந்தைகள் நல அமைப்பினர்..நீதிமன்ற வழக்கு முடியும் வரையில் அக்குழந்தை மற்று மொரு பெற்றோரிடம் வளர கொடுக்க படுகிறாள்....தன் குழந்தையை எப்படி இந்த தந்தை தன் அன்பினால் தன்னால் வளர்க்க முடியும் என இந்த சமூகத்திற்கு உணர்த்துகிறான் என்பது தான் கதை....

Sean penn தந்தை பாத்திரம்...சாதரணமாகவே அவருக்கு குழந்தை போல் ஒரு முகம் ..பின்னி பெடல் எடுக்கிறார் நடிப்பில்....அப்பாவி மற்றும் அன்புள்ள தந்தை கதாபாத்திரம்....அந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நடிகர்...பிறந்த குழந்தையை கையில் எடுத்து "நான் உன் தந்தை...நீ என மகள் " என ஆசையோட ஆரம்பிக்கும் அவரது நடிப்பு படம் முழுக்க நம்மை கட்டி போடுகிறது ...அவரது செய்கைகள், சிரிப்பு என எதுவும் ரசிக்கும் படி உள்ளன...6 வயதான தன் மகளை தன் மார்பில் போட்டு அவளுக்கு புத்தகம் படித்து காட்டும் போது அட என்ன ஒரு தந்தைதனம் இவனுக்குள்ளும் என நாம் நினைக்கும் போது, அப்புத்தகம் அவனுக்கு பிடித்த புத்தகம் என்பதால் அதை திரும்ப திரும்ப படிக்கும் இடத்தில் அப்படியே போய் அவர கொஞ்சலாமா எனத்தோன்ற வைக்கிறார்...காப்பகத்தில் அவரது மகளை வக்கீல் விசாரிக்கும்போது, தன் தந்தை தன்னை விட்டு போக கூடாது என அச்சிறுமி போய் சொல்லும் இடத்தில்...அவளது விசாரணையை TV இல் பார்த்து அழுதுகொண்டே "பொய் சொல்ல கூடாது" என TV இல் முத்தம் இடும் காட்சி ...ரொம்ப சூப்பர் ...இப்படி படம் முழுக்க அவரது நடிப்பு ஆளுகிறது ...

Dakota Fanning , Lucy Dawson , சாம் இன் 6 வயது மகள்..அப்பா என்ன ஒரு அழகு..அதை தாண்டும் நடிப்பு ...ஒரு வேளை sean Penn உடன் நடிப்பதால் அதற்க்கு தேவையான ஆள் என பிடித்து போட்டிருப்பார்கள்...தன் தந்தை ஒரு சராசரி மனிதன் இல்லை என தெரிந்து தன் தந்தைக்காக பல இடங்களில் விட்டு கொடுத்து போகும் பாத்திரம் ....தந்தையை விட கூடுதல் அறிவு ..."அப்பா நீங்க மத அப்பா மாதிரி இல்லன்னு மத்தவங்க சொல்றாங்க.....ஆனா எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு...ஏன்னா எந்த அப்பாவும் பார்க் வந்து விளையாட மாட்டாங்க.." , இப்படி பல இடங்களில் பேசும்போது லூசி மிளிர்கிறாள்......தன் தந்தையுடன் சாப்பிட செல்லும் இடத்தில் தான் கேட்ட உணவு கிடைக்காததால் தந்தை கோபப்பட்டு அழும்போது அங்கு அமைதி காத்து தன் தந்தையை சமாதானம் செய்யும் இடத்தில் , ச்ச இப்படி ஒரு குழந்தையா என தோன்ற வைக்கிறாள்...

Michelle Pfeiffer - சாம் இன் வக்கீல்...தன் கணவன் குழந்தை மீது அக்கறை இல்லமால் தன் தொழிலை கட்டி அழும் ஒரு பெண்..வேறு வழி இல்லாமல் சாம் இன் பக்கம் வாதாட ஆரம்பித்து.. பின் உண்மையான அன்பின் மீது உள்ள வீரியம் கண்டு ஒரு தாயாய் மாறும் பாத்திரம்...விசாரணையின் போது எப்படி பேச வேண்டுமென சாம் இடம் விளக்கும் போது அவனது குழந்தை தனமான பதிலை கண்டு ரியாக்ட் செய்யும் இடத்தில் நம்மை சிரிக்க வைக்கிறாள்...

Sam Friends - ரசிக்ககூடிய கதாபாத்திரங்கள்..அவனை போலவே அவர்களும் சிறிது மன நிலை பாதிக்க பட்டவர்கள்..அனால் அவர்கள் கொடுக்கும் நடிப்பு உருக மற்றும் ரசிக்க வைக்கிறது...


இப்படி படம் முழுக்க, பங்கேற்ற அனைவரின் நடிப்பும் மிக அருமை ...பல இடங்களில் நம்மை சிந்திக்க வைத்து, அழ வைத்து ,சந்தோஷ பட வைத்து .ரசிக்க வைத்து,வேற என்னங்க வேணும் ...இது போதாதா.....உண்மையான அன்பிற்கு மூலம் தேவை இல்லையென உணர்த்தும் ஒரு தரமான திரைப்படம்...
நேரம் கிடைத்தால் பாருங்கள்...

P .S : விக்ரமின் அடுத்த படம், மதரச பட்டினம் இயக்குனர் விஜய்யுடன் என ஒரு தகவல்..அப்படம் வந்தால் அது இதன் ரீமேக் தான் என சொன்னால் ஆச்சர்ய படாதீங்க...வெப்துனியா வில் இந்த செய்தியை படித்து விட்டு பார்த்தேன் இந்த படத்தை ......தப்பே இல்ல பார்த்ததில்...

நன்றி...
daran....

Monday, October 25, 2010

நானும் ஒரு கிறிஸ்தவன்.....

சில பல வருடங்களுக்கு முன்...
காஷ்மீர் மாநிலம்...போர் அபாயம் குறைவான சமயம்..மிகச்சில சிப்பாய்களே எல்லையில்..அச்சமயம் எதிரிகள் ஊடுருவ முயன்ற போது செய்வது அறியாது சற்றே திணறியது நம் படை.எதிரிகளை அங்குள்ள பாலத்தை கடக்க விடாமல் தடுத்தால் கிடைக்கும் நேரத்தில் backup செய்து விடலாம் என்று நினைத்தனர்..அப்போது Major.ரஞ்சித் சிங் தனது உடலில் வெடி குண்டை கட்டிக்கொண்டு குதித்து பாலத்தை தகர்த்தார்...
இந்த கதையை (உண்மையா பொய்யா நு தெரியலங்க..மன்னிச்சுக்கோங்க எங்க அப்பா தான் சொன்னாரு) வேலை நிமித்தமாக பஞ்சாப் சென்ற என் அப்பா கேட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு அப்ப தான் உலகத்துக்கு வந்த எனக்கு "ரஞ்சித்" ன்னு பேர் வச்சாங்க..சரி இதுக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்..பாஷா ரஜினி மாதிரி கண்ணா எனக்கு இன்னொரு பெயர் இருக்கு..."டேனியல்" ..இப்ப தெரிஞ்சிருக்குமே ஆமாங்க நான் ஒரு கிறிஸ்தவன்...

"அய்யா நம்ம நாட்டு சுதந்திரத்துக்கு பாடுபட்டவங்க நிறைய பேர் , ஆனா எனக்கு தெரிஞ்சு அதுல ஒரு கிறிஸ்தவன் கூட இல்லையேன்னு ரொம்ப வருத்தப்பட்டதுண்டு..அப்புறம் கேட்டதும் படித்ததும் வைத்து பாக்கும்போது மிக அதிகமாகவே கிறிஸ்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டார்கள் எனத்தெரிய வந்தது..கொஞ்சம் ரிவர்ஸ் கியர் போட்டு போகலாம்...John the Apostle, later 17th century ல கேரளா வந்தப்ப அவரால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட மதம் கிறிஸ்தவ மதம்...ஒன்னும் ஸ்பெஷல் இல்லைங்க பிற மதம் மாதிரியே அன்பை போதிக்கும் மதம் ...அன்பை "கொடுத்த காசுக்கு அதிகமா கூவுராண்டா கொய்யாலு" அப்படிங்கிற மாதிரி கொஞ்சம் அதிகமாகவே போதித்த மதம்...பிறகு வெள்ளையர்கள் இந்திய வை ஆண்ட போது அவர்களுள் இருந்த சில நல்ல missionaries என்னும் நபர்களால் பள்ளிகள், மருத்துவமனைகள் என ஆரம்பிக்கபட்டு பரவலாகானது கிறிஸ்தவ மதம்...

சரி..இப்ப என்ன அதுக்கு..இதோ வரேன்..வெள்ளைகாரங்க இந்தியா விட்டு போகும்போது நம்ம கலாச்சாரம்,தனித்துவம் இதெல்லாம் ஐஸ் கிரீம் ஆ மாத்தி அத அவனோட கோன் ல போட்டு அடில ஒரு ஓட்டையும் போட்டுட்டு போய்ட்டான்..நம்ம கலாச்சாரம் எல்லாம் ஒழுகி இப்ப வெறும் கோன் எ வச்சு கடிசுகிட்டு இருக்கோம்...அப்படி நம்ம தனித்துவம் இழந்து வெள்ளையனோட சாயல் அதிகமா படிந்த ஒரு மதம் கிறிஸ்தவ மதம்..அனைத்து மனிதர்களிடமும் போலித்தனம் மேலோங்கித்தான் இருக்கு ..இருந்தாலும் இம்மதத்தின் சடங்குகள் , சம்பிரதாயங்கள் எல்லாம் அம்மதம் கூறும் நல்ல விஷயங்களை விடுத்து வேறு வழியில் தான் சென்று கொண்டிருக்கிறது ..
நம்ம தனித்துவம் விட்டு கொடுக்காம இருந்ததால தான் வெள்ளைகார தேவதையான "எமி ஜாக்சன்" கூட மதராசபட்டினத்தில் துணி துவைக்கிற இந்தியனை லவ்வினாங்க...ஆனா இணைக்கு அந்த மதத்தோட பயணிக்கிற முறையில் என்னால், வெள்ளைக்கார சாயம் அதன் மேல் பூசப்பட்டதை உணர முடிகிறது ..

1). முதலில்...முடியல...கல்யாணம் தாங்க..அதுல மாப்பிள்ளைக்கு costume கோட் சூட்..மே
மாசம் சென்னை ல கல்யாணம் நடக்கும்..ஆனாலும் மாப்பிள்ளை கோட் சூட் ல தான்
இருப்பாரு...நமக்கு ஏங்க இந்த விளம்பரம் ..இப்ப எல்லாம் மத்த மதத்துல கூட கோட் சூட்
போடுறாங்க..ஆனா முதலில் நம்ம தமிழ் காலச்சாரம் இருக்கவே இருக்கு...பொண்ணுக்கு
போடுவாங்க ஒரு டிரஸ்..அது தலைல இருந்து ரெண்டு மூணு மீடர் நீளத்துக்கு ஒரு
துணி..அத ரெண்டு சின்ன பிள்ளைங்க வேற பிடிச்சுக்கிட்டே வரும்...எதோ ஆவி சினிமா
பாக்குற மாதிரியே இருக்கும்...வெள்ளையா!!!!

2). இன்னொரு கொடுமை பெயர்..எல்லாம் ஆங்கில பெயர்கள்...என் பேர்ல கூட இருக்கும்...
Fernandez -- பேருதான் இப்படி ஆனா பய இங்கிலீஷ் படத்த தமிழ் dubbing ல தான்
பாப்பான்...அப்படியே இங்கிலீஷ் ல பாத்தாலும் பாத்துட்டு வெளிய
வந்து பாருடா டேய் அந்த ஊர்ல சின்ன பசங்க கூட இங்கிலீஷ் பேசுறானுக டா
ன்னு புலம்புவான்..
Angel --- இந்த பேரோட உண்மையான அர்த்தம் அந்த பொண்ணுக்கு பேர் வச்சவங்களுக்கு
தெரிய பெரும்பாலும் வாய்பிருக்காது.இதுல இன்னொரு கொடும நிறைய வீட்ல
நாய்களுக்கு கூட இங்கிலீஷ் பேர்தான்...என்னோட colleague ஒருத்தன் அவன் வீட்டு
நாய் பேரு "Dani".நல்ல வேல கலர் difference இருக்கு அது வெள்ளை நான் கருப்பு..

3). அப்புறம் இந்த சினிமால பதிரியார்களா வருவாங்க..அவுங்களோட dialogues "my son.." "dont
worry my child.." "God bless you.." என்ன பண்றது யாரு இதெல்லாம் ஆரம்பிச்சு
வச்சாங்கன்னு தெரியல...

இப்படி ஒரு நல்ல மதத்துல இருக்க நல்ல விஷயங்கள விட்டுட்டு, அது சொல்ல வர கருத்த விட்டுட்டு இப்படி போயிட்டு இருக்குகாங்க கிறிஸ்தவர்கள் ...இதெல்லாம் யார் கேக்குறது .கேட்டா My son ன்னு சொல்லுவானுக..ஏன் வம்பு...என்னால முடிஞ்சா வரை என் தாய் மொழியை மறக்காமல் கடைசி வரை வாழ்ந்துட்டு போறேன்...வரட்டா நெக்ஸ்ட் மீட் பண்றேன் ...

Wednesday, August 18, 2010

திருமணம்.......

கோவில் வாசல்..

"அம்மா தாயே வேலை கிடைச்சு ரொம்ப வருஷம் போயாச்சு, சொட்டை விழுகுது, மகராசி நல்லா இருப்பீங்க,பொண்ணு கொடுங்கம்மா...அம்மா தாயே.."

சட்டென்று கண்விழித்தான் கணேஷ்.. மொபைல் போன்ல மணி பார்த்தான் காலை 06:00 மணி...ஐயோ என்ன ஒரு கனவு....இப்படி கேவலமா எல்லாம் கனவு வருது என.பல் துலக்கிகொண்டே நினைத்து பார்த்தான்..."எத்தன பொண்ணுங்கள பாத்தாச்சு..அவுங்களுக்கு பிடிச்சா எனக்கு பிடிக்க மாட்டேங்குது..எனக்கு பிடிச்சா அவுங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது....என்ன கல்யாணமோ!!!"

"தம்பி வணக்கம்" குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான் கணேஷ்....

"யோவ் யாருய்யா நீ..எப்படி வீட்டுக்குள்ள வந்த..என்ன மாதிரியே இருக்க..."

"கணேஷ்..நீ சினிமா எல்லாம் பாக்குறது இல்ல...நீ 1982 ல தான ரிலீஸ் ஆன..அட உன் year of birth எ சொன்னேன்பா அந்த காலத்து படம் எல்லாம் பாத்து இல்ல..நான் தான் உன்னோட மனசாட்சி..கணேஷ்2"

கணேஷ்: சரி நீ எதுக்கு இப்ப வந்த...

கணேஷ்2: இல்லப்பா ரொம்ப வருத்தமா இருக்கியே அதான் என்கூட கொஞ்சம் ஷேர் பண்ணு...உன் வருத்தம் குறையும்...

கணேஷ்: போடா டேய்....என் டைம் வேஸ்ட் பண்ணாத..ஆண்கள பார்த்தாலே இப்ப எல்லாம் எரிச்சலா வருது !!!!

கணேஷ்2: ஹஹாஹ்..உன் வருத்தம் எனக்கு புரியுது..ஆனா கல்யாணத்த பத்தி நீ ஆண் கூட தான் பேசணும்..."திரு"மணம் தான் இருக்கு..."திருமதி"மணம் நா இருக்கு...share with me dude..

கணேஷ்: என்னத்தய்யா சொல்றது....என்ன arranged marriage ஒரே சொதப்பல்...ஒன்னும் சரியா அமைய மாட்டேங்குது..எனக்கு வர போற மனைவி இப்படிதான் இருக்கணும்னு நான் நினைக்கிறது என்னய்யா தப்பு ..இது வாழ்க்கை இதுல compromise பண்ணிட்டு போக முடியாது....பேசாம லவ் பண்ணிருக்கலாம்...

கணேஷ் 2: மச்சி...லவ் வேண்டாம்டா....இளம் வயதில ஒரு ஆண்மகனோட லைப் ல வரக்கூடாதது ரெண்டு ஒன்னு "sugar" இன்னொன்னு "figure".காதல் ரொம்ப ஆபத்தான வியாபாரம்...என்னடா வியாபாரம் சொல்றேன்னு பாக்குறியா...ஆமாம்பா ...நீ உன் இதயத்த அடகு வச்சு காதல் வாங்குவ...அத அந்த பொண்ணுகிட்ட நீ விக்கணும்...அட உன் காதல சொல்லணும்..உன்ன இவ்ளோ லவ் பண்றேன்..அவ்ளோ பண்றேன் நு விவரிக்கணும்....நீ வெற்றி அடைஞ்சா லாபம் உன்னோட காதல் அந்த பொண்ணுக்கு போய் நீங்க ரெண்டு பேரும் சேந்து இருப்பீங்க..ஆனா தோல்வி அடைந்தால் உன்னோட காதல் உன்கிட்டயே இருக்கும்...நீ அடகு வச்ச இதயத்தையும் உன்னால மூட்ட முடியாது.....பேசாம அந்த ஐடியா வேண்டாம்...உனக்கு ஒத்து வராது ...

கணேஷ்: arranged marriage அத விட மோசம்.....எனக்கு இது வரைக்கும் ஒரு பொண்ண கூட பிடிக்கல...ஒரே மதம் , ஒரே இனம் இப்படி பல விஷயங்கள் இருக்கு ...அத தாண்டியும் போக முடியல...

கணேஷ்2: டேய் ..அது அப்படி தாண்ட..பொண்ணு நல்ல குடும்பத்து பொண்ணா..நல்ல குணமா...அதான்டா முக்கியம்...உன் அம்மா அப்பா எந்த பொண்ண பாத்து சொல்றாங்களோ அந்த பொண்ண பேசாம கல்யாணம் பண்ணிக்கோ...அழகு எல்லாம் முக்கியம் இல்ல..

கணேஷ்: ஆஹா நல்ல இருக்கே நீ பேசறது...உனக்கு ஒரு உதாரணம் சொல்றேன்...மவனே கேட்டுட்டு என் டைம் வேஸ்ட் பண்ணாம ஓடிடு...இப்ப நான் ஒரு கடைக்கு போறேன் எனக்கு shirt வாங்க போறேன்....ஆனா jeans pant எடுத்துக்க சொல்லி வற்புருதுறாங்க..எனக்கு jeans தேவை இல்ல...சரி கொடுக்குறிய நல்ல levi's ஜீன்ஸ் எ கொடு...நீயா கொடுக்குறேன்னு சொல்ற அப்பா நல்ல branded எ கொடு...இப்படி கேக்குறது தப்பா ....நீயே சொல்டா மண்டையா!!!

கணேஷ்2: ஓஹோ அப்ப கல்யாணம் பண்ண ,நீ விரும்புற மாதிரி எல்லா குணங்களும் இருக்கணும்....top branded levi's jeans கேக்குற..ordinary jeans வேண்டாம் ...ஒன்னே ஒன்னு கேக்குறேன்....உன்கிட்ட இருக்காதே 400 rs.. நீ என்ன தைரியத்துல levi's jeans கேக்குற...எதோ அவுங்கள பாது கொடுக்குராங்களே...அதுல எது நலல்த அத எடுக்கணும்..

கணேஷ்: ஒத்துக்கிறேன் மண்டையா நான் அழகு இல்லைதான்.....இருந்தாலும் என்னோட கொள்கைய நான் விட்டு கொடுக்க முடியாது ..... கொண்ட கொள்கைக்காக உயிரையே கொடுக்கிறவன் நான்... சுருக்கமா சொன்ன நான் புலி,பசிச்சாலும் புல்ல தின்ன மாட்டேன்....

கணேஷ்2: ஓஹோ, சரி கனவு ஒன்னு கண்டியே எத்தன மணிக்கு அது ???

கணேஷ்: விடிய காலை 06:00 மணி...ஏன் ?

கணேஷ்2: சரிதான் ....next கோவில் ல meet பண்றேன்..... bye...all the best...............


Wednesday, May 12, 2010

நேற்றைய செய்தி - பாகம் 2


Dr.ஞான ராஜ சேகரன் guest house - October 2009 - சேலம்
"உனக்கு எத்தன தடவ சொல்றது...என்ன பாக்க இங்க வராதன்னு...நான் தான் உனக்கு தேவையான எல்லா வசதியும் பண்ணி தரேன்ல..அப்புறம் என்ன??"
"அது இல்லங்க..நீங்க எனக்கு தாலி கட்டாம இருக்கலாம்..ஆனா அப்பப்ப நம்ம பிள்ளையோட நினைப்பு கூட இல்லையே உங்களுக்கு.."
"அவளுக்கு என்ன இப்ப..நல்ல தான இருக்கா.."
"கடந்த ஒரு மாசமா அவளோட உடம்பு ரொம்ப மொசமாயடுச்சு...நெஞ்சு வலி அதிகமா ஆய்டுச்சு....சாகிற வயசா அவளுக்கு..நீங்க எவ்ளோ பெரிய
டாக்டர் நானும் உங்க கிட்ட கேட்டுகிட்டே இருக்கேன்...என்னதான் நான் முறைப்படி உங்க கூட வாழலனாலும் அவளுக்காக நீங்க ஏதாவது பண்ணுங்க.."
"அதெல்லாம் பாக்கலாம்...சரி நீ நாளைக்கு அவள GH கு கூட்டிட்டு வா..நான் பாக்குறேன்..."

R4 Police station - Salem - December 2009
"யோவ் ஏட்டு என்னய்யா அந்த செத்து போன பொண்ண பத்தி ஏதும் தகவல் கிடைச்சிதா...body claim பண்ணி யாரும் வரல...அனாதையா இருக்குமோ..ஹம்..சரி பேப்பர் ல போட்டோ போட்டு கூட ஒரு தகவலும் இல்லையே...ரெண்டு மாசத்துக்கு மேல ஆய்டுச்சு... case close பண்ணனும் சாமி "
"சார், உங்கள பாக்கனும்னு ஒரு mother வந்திருக்காங்க.."
"சரி வரச் சொல்லு..."
"வணக்கம் சார், நான் தெரேசா அநாதை ஆஷ்ரம் நிர்வாகி...இந்த பொண்ணோட போட்டோ பாத்தேன் அதான் வந்தேன். இவ பேரு அனிதா..இவ ஒரு அநாதை சார்..எங்க ஆசிரமத்துல
தான் வளர்ந்தா...merit la computer course முடிச்சிட்டு last one year ஆ சென்னை ல ஒரு கம்பெனி ல வேல பாத்துட்டு இருந்தா...அப்பப்ப லெட்டர் போடுவா.."
"அந்த பொண்ணோட கம்பெனி விலாசம் தெரியுமா மதர் உங்களுக்கு ?? "
"அவ கடைசியா போட்ட லெட்டர் இருக்கு சார்..இந்தாங்க.."
"ஏட்டு அந்த அட்ரஸ் எ படி...."
"ABC Infotech Private Limited,
Nungambaakkam, Chennai - 31"


ABC Infotech Limited - Chennai - December 2009
"என்னடா கணேஷ் இப்ப எல்லாம் ரொம்ப வருத்தமா இருக்க..உன் விருப்பபடி நந்தினியும் நீயும் லவ் பண்றீங்க...நல்ல ஜோடி..அப்புறம் என்னடா கவலை உனக்கு..."
"அது இல்லடா ..கொஞ்ச நாளா என்னோட professional life ரொம்ப மோசமா இருக்கு.....நேத்து deliver பண்ண codela பெரிய bug ...client was pissed off....
Srini was very unhappy...லாஸ்ட் week பண்ண proposal ல கூட பெரிய flaw......onsite chance kkaga எவ்ளோ நாள் வெயிட் பண்ணேன்...என்னோட பாஸ்போர்ட் கூட தொலைஞ்சு போச்சு...என்ன நடக்குதுன்னே புரியல...என்னக்கு இப்ப இருக்க ஒரே ஆறுதல் நந்தினி தான் ..

After 2 hours.....
"யோகேஷ் சார்,,,உங்க நண்பன் கணேஷ் நம்ம நந்தினி கிட்ட தகாத முறைல நடந்ததா பெரிய பிரச்னை..."
Inquiry Room...admin head Col.John chellaiah..பக்கத்துல அழுதுகிட்டே நந்தினி ...சட்டை எல்லாம் கிழிஞ்சு ஒரு ஓரமா கணேஷ்..."
"என்னம்மா ஆச்சு சொல்லுங்க..இவன் என்ன ரொம்ப நாளா disturb பண்றான் சார்...இன்னைக்கு நான் ரெஸ்ட் ரூம் போகும்போது என்ன பின்னாடியே வந்து......."
"ஸ்ரீனி ..no more hesitations...he was caught red handedly...terminate him and call the police..."


இன்று - January 2010- சென்னை மத்திய சிறைச்சாலை
"ஹலோ கணேஷ்...எப்படி இருக்கீங்க..."
"ஏன் நந்தினி...ஏன் இப்படி பண்ண...உன்ன லவ் பண்ணது என் தப்பா??"
"ஹஹஅஹஹா...லவ...அனிதா ஞாபகமிருக்கா"
"அனிதா...அவள எப்படி உனக்கு தெரியும்..என்ன சம்பந்தம் உங்க ரெண்டு பேருக்கும்..."
"அது அப்புறம்...முதல அவளோட தற்கொலைக்கு காரணம் நீ..அத ஒத்துக்கோ.."
"what non-sense...நான் சாதரணமா பழகுனேன்..அவ தப்பா புரிஞ்சுகிட்டு என்ன கல்யாணம் பண்ண சொன்ன..அது என் தப்பா..."
"அப்பா இந்த போடோஸ்..இதுதான் நீ சாதரணமா பழகுன விதமா...?"
"உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் நந்தினி...???"


இன்று - January 2010- Dr.ஞானராஜசேகரன் guest House-சேலம்...
"அத நான் சொல்றேன்....கேளுங்க....என்னோட experiment la பெரிய success...என்னோட brain transplantation டெஸ்ட் பண்ண எனக்கு ஒரு donor and
recipient தேவைப்பட்டது..அந்த நேரம் எனக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம் தற்கொலை பண்ணி செத்து போன பொண்ணு...அநாதை பிணம்...postmortem...நான் தான்
பண்ணேன்...அவளோட மூளையும் இதயத்தையும் எடுத்தேன்...என்னோட keep மகள் நந்தினி அப்ப இருதய நோய் காரணமா அட்மிட் பண்ணிருந்தாங்க...அவளுக்கு brain
transplant பண்ணா என்னன்னு தோனுச்சு ....அவளுக்கு பண்ணனும்னு எனக்கு என்ன அக்கறையா..நான் டெஸ்ட் பண்ண சரியான body நு தோனுச்சு ....சரி கழுதை அப்படியே
அந்த இதயத்தையும் வச்சிருவோம் நு தோனுச்சு...ஆபரேஷன் success...ஒரு ஏழை பொண்ணுக்கு இலவசமா heart transplant பண்ணதா என்னோட அந்தஸ்து எங்கயோ
போச்சு...அதோட என்னோட brain transplant is also success..shes perfectly ok now...
என்ன அவளுக்கு அந்த அநாதை பொண்ணோட நினைவுகளும் இருக்கும்...ஏன்னா few particular brain lobes are possible to get transferred...not
the entire brain....im gonna anounce tomorrow that i am ready to do for brain transplant first time in the world...first time ஆ அது உலகத்துக்கு ..."
குடி போதையில் தனியே உற்சாகத்தில் மிதக்கிறார் டாக்டர் ...


இன்று - January 2010-R4 Police Station - சேலம்...
"என்னய்யா இது...அந்த அனிதா பொண்ணு கம்பெனி போறதே திடிர்னு ஸ்டாப் பண்ணிடுச்சாம்....அவ செத்ததே நாம சொல்லித்தான் தெரியுது...
என்ன reason for her suicide நு குழப்பமா இருக்கு இன்னும்...pressure வேற தாங்க முடியல.."
"இப்ப என்ன சார் பண்றது..."
"அநாதை கழுதை ...suicide , loosu பொண்ணுன்னு case close பண்ணுய்யா...என்ன IT company...இப்ப கூட ஒருத்தன் அதே கம்பெனில rape attempt case ல மாட்டி உள்ள இருக்கான்...ச்சி என் புள்ளைய IT கம்பெனில மட்டும் சேக்க மாட்டேன்பா ...."



"அவன் வெறுத்த அவளோட மூளை செல்கள் எனக்குள்ள இருந்ததால கணேஷ் பண்ண தப்புக்கு அவன தண்டிக்க முடிஞ்சது...அதனால பிளான் பண்ணேன்..அவனோட codes / work எல்லாம் damage பண்ணேன்..அவனோட பாஸ்போர்ட் கூட எரிச்சேன் ...ஆனா அவன கொல்லணும்னு மட்டும் தோனல...ஏன்னா அவன விரும்பின இதயம் கூட இப்ப என்கிட்ட தான் இருக்கு......"
யோசித்தபடியே ஆஷ்ரம் நோக்கி போகிறாள் நந்தினி alias அனிதா....

முற்றும்....


நன்றி
தரன்..


Tuesday, May 11, 2010

நேற்றைய செய்தி - பாகம் 1

இந்தச் சிறுகதையில் கூறப்படும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே.....

ஜூன் 15 2009 - St.Steven's Hospital,சென்னை --- மாலை 6 மணி.....
Dr.ஞானராஜசேகரன் - M.D,F.R.C.S (Xenograft Specialist) அறைக்கதவு தட்டப்படுகிறது.
"yes, Come in". டாக்டர் என் பெயர் தீபா உங்க கூட நேத்து போன்ல
பேசுனேன்ல..இன்னைக்கு வந்து பாக்க சொன்னீங்க..
"oh deepa, yes yes...i forgot..the famous reporter of Indian Mail huh...சொல்லுங்க interview
start பண்ணலாம்"
" டாக்டர் நீங்க ரொம்ப successful-a பண்ண heart transplantதான் இப்ப hot topic. நீங்க பல
interviews கொடுத்துக் கலைச்சு போயிருப்பீங்க.. i dont want to eat your time more.
எல்லாரும் நீங்க பண்ண சாதனைய பத்தி பேசுறாங்க..எனக்கு நீங்க அடுத்து என்ன
பண்ண போறீங்க. to what are you going towards doctor ? please can you explain me ? "
"என்னோட அடுத்த சாதனை brain transplant"
"ஆனா டாக்டர் அது சாத்தியமா....எனக்கும் கொஞ்சம் மருத்துவ செய்திகள் தெரியும்..
அப்படியே brain transplant பண்ணாலும் டார்கெட் body-la உள்ள nerves support
பண்ணுமா ? spinal cord linkage proper ஆ இருக்குமா ?.it would be a big mess னு
எனக்கு தோணுது...."
"excellent deepa...u know many things... முடியாது னு சொல்றத முடிச்சு காட்டுறது
தான சாதனை ஹ்ம்...give me some time..and you guys wait for some time..
will give you all a very shocking n pleasant news.... நான் அவசரமா ஒரு meeting
போகணும் நம்ம interview முடிச்சுக்கலாமா ?? "
"Sure Doctor...thanks for your time....All the very best for your efforts.."

செப்டம்பர் 5 2009 - சேவியோ பாலம்,சேலம் --- இரவு 11:30 மணி
"யோவ் constable ambulance வந்திருச்சு சீக்கிரம் ஏத்து.. இன்னும் உசிரு
இருக்கு...சீக்கிரம் சீக்கிரம்...hospital கொண்டு போங்க...யாருய்யா எனக்கு
தகவல் சொன்னது ?"
" நான் தாங்க....என் பேரு பெருமாள்...நான் இந்த பாலத்துக்கு கீழ தாங்க தினமும்
தூங்குவேன்...இன்னைக்கு தூங்கலாம்னு படுத்தப்ப, இந்த
பொண்ணு பாலத்துக்கு மேல இருந்து கீழ குதிக்க போனுச்சுங்க.. நான் கத்துனேன்
..ஆனா அதுக்குள்ள....."
"நல்ல வேளை நான் சரியாய் ரோந்து வந்தேன்...இல்லனாஅந்த பொண்ணு உசிரு
போயிருக்கும்..சரி ஸ்டேஷன் வந்து statement எழுதி கொடுத்திட்டு போ..."
"Inspector Sir, hospital ல இருந்து போன்..அந்த பொண்ணு செத்து போச்சாங்க...."

நவம்பர் 11 2009 - ABC Infotech Limited, சென்னை --- காலை 10 மணி
" டேய் மச்சி, இன்னைக்கு நம்ம ஆபீஸ் ல ஒரு பொண்ணு join பண்றாடா ....நம்ம
recruitment HR பய புள்ளைகிட்ட கேட்டேன்... super ஆ இருப்பாலாம்டா...நம்ம டீம்
ஆ இருந்தா சூப்பர் ஆ இருக்கும்..."
"கணேஷ், இன்னைக்கு நம்ம டீம் ல சௌம்யா னு ஒரு பொண்ணு join
பண்ணுறா...நம்ம ப்ராஜெக்ட் பத்தி ஒரு induction manual prepare
பண்ணுங்க...you will be the mentor for her ok ??? "
" Ok ஸ்ரீனி, i will do that..."
"டேய் மச்சி எங்கப்பன் எனக்கு யோகேஷ் னு பேரு மட்டும்தான் வச்சான்...ஆனா
கொஞ்சம் கூட யோகம் இல்ல..உனக்கு அடிக்குதுடா யோகம்..."
"டேய் ஏன்டா இப்படி அலையிற..அந்த பொண்ணு எப்படி இருப்பான்னு கூட நமக்கு
தெரியாது...வேலைய பாருடா முதல்ல..first induction manual template send
பண்ணு.."
"Are you Mr.Ganesh, Hi I am nandhini.. Srinivasan asked me to meet you"
கணேஷ் க்கு அப்படியே தூக்கி வாரி போட்டது...என்ன ஒரு அழகு ...நிஜமாவே தான்
யோக காரன் என ண்ணிக் கொண்டான்...அப்படியே வாரணம் ஆயிரம் சூரியா train ல
சமீரா ரெட்டி பாக்கும் போது செய்யிற மாதிரி பல செய்கைகள் செய்யணும்னு
தோணுது...
"Hi Nandhini, Welcome to our team....."


தொடரும்.........
நன்றி
தரன்....

Monday, May 3, 2010

சுறா - திரை விமர்சனம்

உலகத் தமிழ் மக்கள் ஆவலாய் எதிர் பார்த்த இளைய தளபதியின் 50 வது படம். மக்களின் எதிர்பார்ப்பை சிறிதும் குலைக்காமல் பூர்த்தி செய்துள்ளது சுறா..

சுறா என்னும் பெயருக்கேதாற்போல் சினிமா என்னும் கடலை விஜய் ஆளப்போவது உறுதி...பல இடங்களில் வழக்கம் போல் விஜய் மிக அழகாய்த் தெரிகிறார்..ஆண் சுராவிற்கு ஏத்தாற்போல் பெண் சுறாவான தமன்னாவும் போட்டி போட்டு நடித்துள்ளார்..."மீன் செதில்ஸ்" off to you tamanna.
படத்திற்கு பெரிய பலம் கதை...வசந்த பாலன், பாலா,கௌதம் மேனன் போன்றோர்கள் தமிழ் சினிமாவை சிதைக்கும் போது, SP ராஜ்குமார் போன்ற திறமை சாலிகள் இருக்கும் போது நம்மால் நிம்மதி பேரு மூச்சு விட முடிகிறது ...

இது தான் வதை ச்சி கதை

யாழ் என்னும் குப்பத்தை சார்ந்த, கலர் கலராய் தினம் சட்டை போடும் மீனவன் கதாநாயகன் அதாவது நம்ம சுறா. அவர் பெரும் அதே தான்...மீனவ மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது தான் தனது லட்சியம் என வாழ்பவர். லட்சத்தில் ஒருவன் தான் இம்மாதிரி குணங்களுடன் இருப்பார் என பாதிரியார் ராதா ரவி சொல்லும் போது நமது ரோமங்கள் எல்லாம் குத்திட்டு நிற்கின்றன...
தனக்கு திருமணம் வேண்டாம் என வாழும் சுராவின் கடலுக்குள் ஒரு gold fish நுழைகிறது....சுராவை காதலிக்கிறது அந்த மீன்....இவ்விருவருக்கும் இடையிலான காதல் கட்சிகள் மிக அருமை.... gowtham menon,AR murugadoss,manirathnam உங்களுக்கு கஷ்ட காலம் தான் இனி...SP ராஜ்குமார் வருகிறார்..மிக நேர்த்தியான இரண்டு காட்சிகளில் காதல் பிறக்கிறது....ஆஹா சபாஷ் ..

படத்தின் பெரிய ட்விஸ்ட் வில்லனுக்கு அந்த குப்பத்து இடம் தேவை படுகிறது.....ஆந்திர ரியல் எஸ்டேட் பணக்காரர்களை எல்லாம் சாதரணமாக கொள்ளும் வில்லனால் சுராவிற்கு வலை போட முடியவில்லை ...முடியுமா...முடியாது ...சிக்கித் திணறுகிறார் ...ஒரு கட்டத்தில் விஜய் கொல்லப்பட துக்கம் தொண்டையை அடைக்கிறது படம் பார்ப்பவர்களுக்கு...ஐயோ இனிமே காமெடி scenes இல்லையேன்னு திரைஅரங்கில் உருண்டு புலம்புகிறார்கள் மக்கள்....ஊரே கொளுத்தப்பட சிலையின் அடியில் இருந்து உயிரோடு வருகிறார் சுறா...

வில்லனிடம் சவால் விடுத்து அவரின் கடத்தல் பொருள்களை புஸ்வானம், ராக்கெட் போன்ற சக்தி வாய்ந்த ஆயுதங்கள் கொண்டு அபேஸ் செய்கிறார்.அடுத்த காட்சியில் 100 கோடி ருபாய் பணத்துடன் குப்பம் திரும்புகிறார் audi கார்-இல்..வில்லனின் எதிர்ப்புகளை தாண்டி குப்பத்து மக்களுக்கு வீடு கட்டி தருகிறார்..சுபம்...

அனல் பறக்கும் வசனங்கள், புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகள்,விசில் பறக்கும் நடனங்கள் என பறந்து உருண்டு பிரண்டு அசத்தி இருக்கிறார் விஜய்...

படத்தின் +
கதை ,திரைக்கதை, வசனம்,பாடல்கள்,ஒளிப்பதிவு,நடனம்,சண்டைக்காட்சிகள்,படத்தொகுப்பு,இயக்கம்,தயாரிப்பு.மற்றும் பல...

படத்தின் -
பெரிதாய் சொல்வதற்கில்லை...

படத்தைப் பற்றி பத்திரிக்கைகள்...
- An adrenaline charged and testosterone driven movie.. ----SanFrancisco Chronicle
- Another Avatar ------- Washington Post
- Its a great inspiration for my writings ---- Dan Brown
- A thrilling and pleasant experience for the people --- The Hindu
- Movie which brings people to the edge of the seat ---- The christian and The Muslim

Post Release news:
* படத்தை 3D இல் வெளியிடக்கோரி திரு.ராமநாராயாணன் மனு...
* படத்தை அனைத்து உலக மொழிகளிலும் வெளியிட தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்கு ஒசாமா ச்சி ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்...
* SA சந்திரசேகரனின் வீட்டில் கல்வீச்சு....

மொத்தத்தில் சுறா திமிங்கலம்....

நன்றி
தரன்....

Sunday, January 17, 2010

பெண்


இதன் நோக்கம் பெண்களின் உரிமை பற்றி விவாதிப்பது அன்று. எனக்கு தெரிந்த எதிர்கொண்ட சில தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வதே.......ஏதும் பிழை இருந்தால் சுட்டிக் காட்டி மன்னிக்கவும்...

தன் காதல் மனைவிக்காக "தாஜ்மஹால்" கட்டியவன் என்று இன்றளவும் புகழ் மகுடம் சூடிக்கொண்டிருக்கிறான் ஷாஜஹான். ஆனால் அவன் மனைவி வருடம் தவறாமல் குழந்தை பெற்று ஜன்னி கண்டு உடல் வெளிறியது நமக்கு தெரியுமா ? இது தெரிந்திருந்தால் ஷாஜஹான் செய்தது சிறிய கைம்மாறு என்றே வைத்துக் கொள்ளலாம்.ஆனால் புகழ் அவனுக்கு மட்டுமே....

ராமரின் மனைவி சீதையை கவர்ந்து சென்ற ராவணனிடம் போர் கொண்டு சீதையை மீட்டு வர ராமருடன் இலக்குமணன் சென்றதாக இதிகாசம் சொல்கிறது.ஆனால் 12 வருடம் இலக்குமனை பிரிந்த அவனது மனைவியின் நிலையை பற்றி நமக்கு தெரிய வைத்ததா இதிகாசம் ?

மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேர் என்பது நமக்கு தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அவர்களுக்கு துச்சலை என்கிற தங்கை இருந்தாள் என்பது தெரியும்??

இயேசு முதல் பாரதி வரை பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள் சமூகத்தில் இகழ்ச்சிக்கு உண்டாகினர். இன்றைய கால கட்டத்தில் கூட மனைவிக்கு மரியாதை கொடுத்தால் அவனது ஆண்மைத்தன்மை (henpecked ) கேலிக்கு உள்ளாகிறது . இன்று பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறது சமூகத்தில் ஆனால் அதே மரியாதை படிக்காத பெண்களுக்கும் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரியதே. வேலை பார்க்கும் பெண்கள் என்றால் அவர்கள் பேசினால் சம்பாதிக்கும் திமிர் என்று பேச்சு வருகிறது..சரி இருக்கட்டுமே தான் பிறர் உதவி இல்லாமல் வாழ்கிறோம் என்று ஒரு ஆணுக்கு மமதை இருக்கும்போது அது பெண்ணுக்கும் இருந்தால் என்ன தவறு ? அவளது திமிர் குணம் பிடிக்கவில்லை என்று சொல்லலாம் ஏன் என்றால் சக மனிதனிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்காமல் போகலாம் ஆனால் வேலை பார்ப்பதால் தான் அந்த திமிர் என்பது சரியான வாதம் அல்ல .

இன்றும் கூட தங்கள் மகனுக்கு வெளியில் சாப்பிடும் உணவு ஒத்து போவது இல்லை என்பதற்காக சில பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஏன் என் அலுவலகத்தில் கூட எனக்கு கிடைக்கும் அறிவுரை திருமணம் செய்து பார் நல்ல ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்பது.. இது திருமணத்தின் அவசியத்தையே கேள்விகுறியாக்குகிறது !!!!

வெளி உலகம் தெரியாமல் குடும்பப் பொறுப்பை மட்டுமே கவனித்து கொண்டு பல பெண்கள் இருக்கிறார்கள். ஏன் அதில் அவர்களுக்கு மகிழ்ச்சியும் உள்ளது. ஆனால் அவர்கள் மனதுக்குள் எத்தனை ஆவல்கள் புதைந்து கிடக்கின்றன? பணி புரியும் பலர் தங்களது தாயை அழைத்து வந்து இடங்களை சுற்றி காமிக்கும் போது அவர்களின் கண்களில் தெரியும் அந்த வியப்பு, இதுவரை பார்த்திராத கலாச்சாரம்,உணராத மகிழ்ச்சி என அவர்கள் மெதுவாக ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டு நடக்கும் போது கண்களில் கண்ணீர் வரத்தான் செய்கிறது.ஆனால் அவர்கள் மனதில் நினைப்பது தான் என்ன ?

பிழைக்க வழி இல்லை என்றால் ஒரு ஆண் தேர்ந்து எடுக்கும் பாதை கொலை.கொள்ளை, கடத்தல் இப்படி பல.ஆனால் ஒரு பெண் தேர்ந்து எடுப்பது விபச்சாரம், இதில் கூட மற்றவர்களுக்கு உபயோகமாய்த் தான் போகிறாள். பல பருவங்களிலும் பெண்களைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. எதிலோ படித்ததாய் ஞாபகம்
"பெண்ணைப் புரிந்து கொள்ள முயலாதே..அன்பு மட்டும் செய்" ..... முயற்சி செய்து பார்க்கிறேன்...

நன்றி
தரன்...

Tuesday, January 5, 2010

திரைப்படம்

திரைப்படம்

நமது வாழ்கையில் இரண்டறக் கலந்த ஊடகம்...குறிப்பாக எனது வாழ்கையில்....எனக்கு மிகவும் பிடித்த ஊடகங்களில் திரைப்படம் முதன்மையானது..
சிரிக்க வைத்த,சிந்திக்க வைத்த, அழ வைத்த, வெறுப்பேற்றிய,பயமுறுத்திய இப்படி பல திரைப்படங்கள் என்னை கடந்து போய் உள்ளது.திரைப்பட நடிகர்களை நினைத்துதான் எத்தனை கற்பனைகள்!!!..திரைப்படக் காட்சிகளை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்த அவலங்கள் எத்தனை!!

நான் மூன்றாவது படிக்கும் போது "தினம் தினம் உன் முகம் நினைவினில் வருகுது" என்ற பாடலுக்கு பள்ளியில் நடனம் ஆடி முதல் பரிசை வென்றேன்.அப்போது எனக்கு பரிசளித்த அந்த பிரபலம் "தம்பி கமல்ஹாசன் உன்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்" என்று கூறினார்...
அதன் பிறகு நான் ஆடவே இல்லை..கேட்ட எனக்கே இந்த நிலைமை என்றால் அதைச் சொன்ன அந்த பிரபலம் என்னவாகி இருப்பார் என்று தெரியவில்லை..பாவம்...

விக்ரமன் என்ற இயக்குனர் என் மானத்தை கப்பலில் ஏற்றிவிட மிகவும் உதவியவர்...இருப்பதை தானம் செய் என்ற நினைப்பில் பிச்சை கேட்ட ஒரு மூதாட்டியிடம் ** பைசா கொடுக்க அவள் என்னை திட்டிவிட்டு அந்த ** பைசாவை திருப்பி என்னிடமே கொடுத்ததை சொல்லவா, இல்லை நடிகர்களை போல கட்டு மஸ்தான உடல் வாகு பெற, உடற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே அதிக பளு சுமந்து கழுத்துத் தசை பிடித்ததைச் சொல்லவா...அல்லது ரஜினிகாந்த் அணிவது போன்ற மூக்கு கண்ணாடி வாங்கி வந்து அது முதன் முதலாக MADRAS EYE என்ற கண் நோய்க்காக உபயோகப்பட்டதைச் சொல்லவா....

மிகச் சிறந்த பொழுது போக்கு ஊடகமான திரைப்படம் இது வரையில் எனது பொழுதைப் போக்க மிகவும் உறுதுணையாய் இருந்தது என்பதை என்னால் மறுக்க இயலாது.என்னை,
சிரிக்க வைத்த திரைப்படங்கள் ----> சதி லீலாவதி, சிங்கார வேலன், பிரண்ட்ஸ் மற்றும் பல..
சிந்திக்க வைத்த திரைப்படங்கள் ----> அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால், மொழி மற்றும் பல..
அழ வைத்த திரைப்படங்கள் ----> மகாநதி, வெயில், பூவிழி வாசலிலே மற்றும் பல..
வெறுப்பேற்றிய திரைப்படங்கள் ----> கந்தசாமி,தென்னவன்,சங்கமம் மற்றும் பல..
ரசிக்க வைத்த திரைப்படங்கள் ----> காதலுக்கு மரியாதை, அஞ்சாதே,மௌன ராகம் மற்றும் பல ...
பயமுறுத்திய திரைப்படங்கள் -----> ஷாக், தருமபுரி, ஜெ கே ரித்திஷ் இன் நாயகன் மற்றும் பல...

நன்றி,
தரன்.







நட்புத் தோல்வி...

பரீட்சைத் தோல்வி, காதல் தோல்வி, வியாபாரத் தோல்வி இவைகளின் வரிசையில் இவைகளை போல வேதனை தரக்கூடியது நட்புத் தோல்வி....
" A Friend is a person who knows you well,with whom you can have affection and trust, and with whom you can feel the comfortableness..."


மேற்கூறியவைகளில் ஒன்று குறை படும்போதோ அல்லது அவைகளுக்கு அப்பாற்பட்டு சில குறைப்படும்போதோ அடைவது நட்புத் தோல்வியா?
தேடிச் சென்று அடையகூடியது அல்ல நட்பு, நட்பு என்கிற உணர்வு இரு மனிதர்களிடையே, இருவருக்கும் மற்றவர் பால் தோன்றக்கூடியது.இவ்வுணர்வு ஒருவரிடம் குறைப்படும்போது மற்றவர்க்கு அது நட்புத் தோல்வியா? அல்லது அவ்வுணர்வு தான் மற்றவரிடம் கொண்டது போல் மற்றவர் தன்பால் கொள்ளாததை அறிய வரும்போது அடைவது நட்புத் தோல்வியா?

மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியும் நிகழும் நிகழ்வுகளை நன்கு உணரக்கூடிய பருவம் (Maturedness) எய்தும் போது, அவனிடம் அன்பு எடை போட்டு உபயோகப் படுகிறது... அன்பு செலுத்தும் முன் இதயத்திற்கு முன்பு மூளையைத் துணையாகக் கொள்கிறான்...இது சரியா தவறா என்கிற வாதத்தை விட, அத்தகைய மனிதனுக்கு தோல்விகள் பகையாளிகள் ஆகின்றன என்பது ஒரு நிதர்சனமான உண்மை. இவ்வாறில்லாமல் தன்னைப் பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் உரிமையோடும் நம்பிக்கையோடும் மற்றவரிடம் பகிரும் போது, மற்றவர் தன்னையல்லாமல் வேறொருவரிடம் அங்ஙனம் பழகுவதை உணருவது நட்புத் தோல்வியா ?
இல்லை தான் நண்பராக நினைப்பவரிடம் செலுத்தும் அன்பில் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் எட்டிப்பார்க்கும் போது அடைவது நட்புத் தோல்வியா?

மேற்கூறிய அல்லது மேற்பிதற்றியவைகளின் மூலம் அடைவது நட்புத் தோல்வியா? அன்பை திரும்ப பெறாமல் கொடுத்துகொண்டே இருக்க நட்பால் ஆகுமா ? அங்ஙனம் நிகழ்ந்தால் அது நட்பாகுமா ?
மனிதனுக்கு எட்டாதவைகள் பல உண்டு என்பார்கள், அவற்றுள் ஒன்றாய் இதை நான் எடுத்துக்கொள்கிறேன்....