Monday, December 13, 2010


I AM SAM

அன்பு செலுத்த பணம்,துணிவு,அழகு,அறிவு இப்படி எதுவும் தேவை இல்லை என்பதை உணர்த்தும் விதமாக பல திரைப்படங்கள் வந்துள்ளன..சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த இதனை நாள் பார்க்காமல் விடுத்த ஆங்கில திரைப்படம் "I am Sam" ...2003 ஆம் வருடத்தில் வெளிவந்த படம்..இதனை நாள் கழித்து நான் பார்க்க உதவிய "வெப்துனியா.காம்" கு நன்றி....எனக்கு பிடித்த இந்த திரைப்படம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு எழுதுகிறேன்...என் விமர்சனம் உங்களை கவர்ந்தால் படத்தை பாருங்கள்...பிடிக்க வில்லை என்றாலும் படத்தை பாருங்கள்..என் தப்பான விமர்சனத்திற்காக ஒரு நல்ல
படத்தை இழந்து விடாதீர்கள்........

7 வயது அறிவுடன் குழந்தைத்தனமான ஆடிசம் எனும் மன மாறுதல் கொண்ட 32 வயது ஆண் dawson . காபி ஷாப் - இல் பணி புரியும் இந்த கதாநாயகன் வேகமாக மருத்துவமனை நோக்கி செல்கிறான்..அங்கு அவன் மனைவி அழகான பெண் குழந்தையை பிரசவிக்கிறாள்...கணவன் மீது கொண்ட வெறுப்பு, குழந்தையை பார்க்க கூட விருப்பமில்லாமால் இருவரையம் விட்டு விலகி செல்கிறாள்...கையில் குழந்தையுடன் ஒரு குழந்தைத்தனம் கொண்ட தந்தை...இப்படி ஆரம்பிக்கிறது கதை...

குழந்தை வளர வளர தந்தையை விட சிறுமி மிகுந்த அறிவோடு வளருகிறாள் ...தந்தை மீது தீராத பாசம்...தந்தையோ தன மகளை ஒரு பூப்போல் பாதுகாக்கும் ஒரு நல்ல குழந்தை...மகள் 7 வயதை நெருங்கும்போது அவளை வளர்க்க அத்தந்தை அருகதை அற்றவன் என அப்பிள்ளையை எடுக்கிறார்கள் குழந்தைகள் நல அமைப்பினர்..நீதிமன்ற வழக்கு முடியும் வரையில் அக்குழந்தை மற்று மொரு பெற்றோரிடம் வளர கொடுக்க படுகிறாள்....தன் குழந்தையை எப்படி இந்த தந்தை தன் அன்பினால் தன்னால் வளர்க்க முடியும் என இந்த சமூகத்திற்கு உணர்த்துகிறான் என்பது தான் கதை....

Sean penn தந்தை பாத்திரம்...சாதரணமாகவே அவருக்கு குழந்தை போல் ஒரு முகம் ..பின்னி பெடல் எடுக்கிறார் நடிப்பில்....அப்பாவி மற்றும் அன்புள்ள தந்தை கதாபாத்திரம்....அந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நடிகர்...பிறந்த குழந்தையை கையில் எடுத்து "நான் உன் தந்தை...நீ என மகள் " என ஆசையோட ஆரம்பிக்கும் அவரது நடிப்பு படம் முழுக்க நம்மை கட்டி போடுகிறது ...அவரது செய்கைகள், சிரிப்பு என எதுவும் ரசிக்கும் படி உள்ளன...6 வயதான தன் மகளை தன் மார்பில் போட்டு அவளுக்கு புத்தகம் படித்து காட்டும் போது அட என்ன ஒரு தந்தைதனம் இவனுக்குள்ளும் என நாம் நினைக்கும் போது, அப்புத்தகம் அவனுக்கு பிடித்த புத்தகம் என்பதால் அதை திரும்ப திரும்ப படிக்கும் இடத்தில் அப்படியே போய் அவர கொஞ்சலாமா எனத்தோன்ற வைக்கிறார்...காப்பகத்தில் அவரது மகளை வக்கீல் விசாரிக்கும்போது, தன் தந்தை தன்னை விட்டு போக கூடாது என அச்சிறுமி போய் சொல்லும் இடத்தில்...அவளது விசாரணையை TV இல் பார்த்து அழுதுகொண்டே "பொய் சொல்ல கூடாது" என TV இல் முத்தம் இடும் காட்சி ...ரொம்ப சூப்பர் ...இப்படி படம் முழுக்க அவரது நடிப்பு ஆளுகிறது ...

Dakota Fanning , Lucy Dawson , சாம் இன் 6 வயது மகள்..அப்பா என்ன ஒரு அழகு..அதை தாண்டும் நடிப்பு ...ஒரு வேளை sean Penn உடன் நடிப்பதால் அதற்க்கு தேவையான ஆள் என பிடித்து போட்டிருப்பார்கள்...தன் தந்தை ஒரு சராசரி மனிதன் இல்லை என தெரிந்து தன் தந்தைக்காக பல இடங்களில் விட்டு கொடுத்து போகும் பாத்திரம் ....தந்தையை விட கூடுதல் அறிவு ..."அப்பா நீங்க மத அப்பா மாதிரி இல்லன்னு மத்தவங்க சொல்றாங்க.....ஆனா எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு...ஏன்னா எந்த அப்பாவும் பார்க் வந்து விளையாட மாட்டாங்க.." , இப்படி பல இடங்களில் பேசும்போது லூசி மிளிர்கிறாள்......தன் தந்தையுடன் சாப்பிட செல்லும் இடத்தில் தான் கேட்ட உணவு கிடைக்காததால் தந்தை கோபப்பட்டு அழும்போது அங்கு அமைதி காத்து தன் தந்தையை சமாதானம் செய்யும் இடத்தில் , ச்ச இப்படி ஒரு குழந்தையா என தோன்ற வைக்கிறாள்...

Michelle Pfeiffer - சாம் இன் வக்கீல்...தன் கணவன் குழந்தை மீது அக்கறை இல்லமால் தன் தொழிலை கட்டி அழும் ஒரு பெண்..வேறு வழி இல்லாமல் சாம் இன் பக்கம் வாதாட ஆரம்பித்து.. பின் உண்மையான அன்பின் மீது உள்ள வீரியம் கண்டு ஒரு தாயாய் மாறும் பாத்திரம்...விசாரணையின் போது எப்படி பேச வேண்டுமென சாம் இடம் விளக்கும் போது அவனது குழந்தை தனமான பதிலை கண்டு ரியாக்ட் செய்யும் இடத்தில் நம்மை சிரிக்க வைக்கிறாள்...

Sam Friends - ரசிக்ககூடிய கதாபாத்திரங்கள்..அவனை போலவே அவர்களும் சிறிது மன நிலை பாதிக்க பட்டவர்கள்..அனால் அவர்கள் கொடுக்கும் நடிப்பு உருக மற்றும் ரசிக்க வைக்கிறது...


இப்படி படம் முழுக்க, பங்கேற்ற அனைவரின் நடிப்பும் மிக அருமை ...பல இடங்களில் நம்மை சிந்திக்க வைத்து, அழ வைத்து ,சந்தோஷ பட வைத்து .ரசிக்க வைத்து,வேற என்னங்க வேணும் ...இது போதாதா.....உண்மையான அன்பிற்கு மூலம் தேவை இல்லையென உணர்த்தும் ஒரு தரமான திரைப்படம்...
நேரம் கிடைத்தால் பாருங்கள்...

P .S : விக்ரமின் அடுத்த படம், மதரச பட்டினம் இயக்குனர் விஜய்யுடன் என ஒரு தகவல்..அப்படம் வந்தால் அது இதன் ரீமேக் தான் என சொன்னால் ஆச்சர்ய படாதீங்க...வெப்துனியா வில் இந்த செய்தியை படித்து விட்டு பார்த்தேன் இந்த படத்தை ......தப்பே இல்ல பார்த்ததில்...

நன்றி...
daran....