Thursday, May 31, 2012

                                  திருப்பம்

                                                                     
 விடிகாலை 2:30 மணி, சென்னை - திருச்சி நெடுஞ்சாலை. ஆள் அரவமில்லாத , பேருந்துகள் மற்றும் சுமை தூக்கிச் செல்லும் கன ரக வாகனங்கள் படு வேகமாக சென்று கொண்டிருந்தன. சாலையை கடந்து உள்ள பாறையில் கணேஷும் ஆர்த்தியும் அருகருகே அமர்ந்திருந்தனர். 
இருவருக்கும் திருமணமான அறிகுறி இல்லை, இருமனங்களும் தீவிர சிந்தனையில் லயித்திருந்தன...ஏனோ இருவருக்கும் அந்த அதிகாலை காற்று சிறிய மன ஆறுதலை கொடுப்பதில் ஆச்சர்யமில்லை....
                                           ********************************************                                                                                                      

ஆர்த்தி :- 
மன்னார்குடி அருகே உள்ள மன்னம்பந்தலை சொந்த ஊராக கொண்ட வெங்கட்ராமன் லதா தம்பதியரின் மூத்த மகள். MCA முடித்து விட்டு சென்னையில் உள்ள IT company இல் பணிபுரியும் பாழாய்ப்போன ஒரு software engineer. குடும்பம் மொத்தமாக சென்னைக்கு குடி பெயர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன...

கணேஷ்:-
சென்னையில் Granite business செய்யும் ராஜவேல் லலிதா தம்பதியரின் இளைய மகன். அண்ணன் திருமணமாகி சிங்கப்பூரில் வசித்து வருகிறான் இன்ஜினியரிங் முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சென்னை வாலிபன் கணேஷ் . அளவுக்கதிகமாக பணம் இருந்தும் தன் மகனின் பிடிவாதத்திற்கு இணங்கி அவனை வேலை பார்க்க அனுமதித்திருந்தார் ராஜவேல்..

கணேஷ் &ஆர்த்தி :-
பல ரகங்களில் கார்கள் இருந்தாலும் தன் நண்பனோடு பேருந்தில் பயணம் செய்வது கணேஷுக்கு பிடிக்கும். பேருந்து நிறுத்தத்தில் ஆர்த்தியை பார்த்த போது கூட பெரிதாய் நினைக்கவில்லை..அவன் நண்பன் பல முறை ஆர்த்தியை பற்றி சொல்லும்போது கூட "மச்சி , பொண்ணுங்க எவ்ளோ மோசமா இருந்தாலும் பார்க்க பார்க்க அழகா தான் தெரிவாங்க" னு தத்துவம் பேசுவான்...அப்படிப்பட்ட கணேஷுக்கு சில நாட்களாக ஆர்த்தி அழகாய்த் தெரிய ஆரம்பித்தாள். 
பல நாள் யோசித்து ஒரு நாள் "அலைபாயுதே" மாதவன் , "சேது" விக்ரம், "பூவெல்லாம் உன் வாசம்" அஜித் இப்படி எந்த pattern இல்லாமல் அவளிடம் தன் விருப்பத்தை சொன்னான்.ஆர்த்தியின் பதிலை கேட்ட கணேஷுக்கு தூக்கி வாரி போட்டது...ஆமா, பின்ன தனக்கே தெரியாத பல கெட்ட வார்த்தைகளை கொண்டு ஆர்த்தி அவனை திட்டினால் ?? ஆர்த்திஅவனை சர மாரியாக கொஞ்சிக்கொண்டிருக்கும்போது "டேய், என்னடா யோசிக்கிற? " என அவன் நண்பன் தோளை தொட நினைவுக்கு வந்தான்.
"அட கனவா !!ச்சி, என்ன ஒரு imagination. ஒருவேளை பொண்ணு லோக்கலா இருக்குமோ" என்று ஆர்த்தியை மறுபடியும் பார்த்தான்.ரோட்டில் எச்சில் துப்பும் ஆளை  பார்த்து அவள் ஒதுங்கும் போது எதோ கணேஷுக்கு ஒரு ஆறுதல். அன்றைய தினமும் கழிந்தது!!!
இப்படியாக சென்று கொண்டிருந்த சமயம், அந்த நல்ல நாளும் வந்தது. அதுவும் நம்ம "இதயம்" முரளி மூலம் வந்தது. தன் காதலையே சொல்லத் தயங்கும் முரளி இவர்கள் காதலுக்கு துணை தந்தார்..அட புரியலையா ?? "பாலாவின் அடுத்த படத்தில் முரளி வில்லன் " என்ற செய்தியை படித்துக்கொண்டே சென்றபோது , எதிரே வந்த ஆர்த்தியின் தோழியின் மேல் இடித்துவிட்டான். "sorry" என சொல்வதற்குள் வழக்கம் போல் அங்கு உள்ள சில வேலை இல்லாத road side romeos தங்கள் "கை" வரிசையை காட்ட, இந்த இரு பெண்கள் கூட கோவத்தை விட பரிதாபப்பட்டார்கள்.இதன் மூலம் ஆர்த்தியுடன் பேச்சுவார்த்தை துவங்கியது கணேஷுக்கு. சரி என்ன ஆமாம் அதே தான் இவர்களின் உறவும் காதல் பேருந்தில் ஏரியுது..

இங்கேயுமா!!!:-
காதலர்களுக்கு எப்போதும் இரண்டு பிரச்சனைகள்.
1) தங்கள் காதலை சொல்வது ,
2) IF OK THEN DO:
         
          IF CONVINCED THEN 
               
          ELSE
                < ???????????? > 
    END. 
நம்ம கணேஷ்-ஆர்த்தி நிலைமையும் மேலே பார்த்த கேள்விக்குறி உடைய இடத்துக்கு தான் வந்தது. பணக்கார அப்பா, நிச்சயமாக சம்மதிக்கவில்லை .அப்பா சரின்னு சொன்னாலும் குசும்பு பிடிச்ச அண்ணன் பெரிய தடை.நிலைமை மோசமாகத்தான் போனது. நம் வாழ்வில் நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்கும் போது , நாம் சில சமயங்களில் சிந்திக்கும் திறனை இழப்பதில் ஆச்சர்யமில்லை. அப்படி ஒரு முடிவெடுத்தனர் இருவரும்.திருச்சியில் இருக்கும் தன் சித்தப்பாவின் வீட்டிற்கு போவதென தீர்மானித்து இருவரும் வீடிற்கு தெரியாமல் கிளம்பினர். விருப்பம் இல்லாமலும் கணேஷை விட்டு பிரிய மனம் இல்லாமலும் ஆர்த்தியும் இந்த முடிவுக்கு சம்மதித்தாள்.இரவுப் பேருந்தில் திருச்சிக்கு பயணமாயினர் இருவரும். 
                                     *************************************************                                                   

அந்த அதிகாலை குளிர் இருவருக்கும் சுகமாய் இருந்தாலும் மனதில் பெரிய பாரம். இருவரும் கை கோர்த்தபடி சாலைக்கு வந்தனர். வழியில் செல்லும் வாகனத்தை பிடித்து சென்று விடலாம் என்று முயற்சி செய்தனர்.

திருப்பம்:-
எந்த ஒரு வாகனமும் நிறுத்தவில்லை. பேருந்து , லாரி, சுமோ , என்று கடைசியாக ஒரு tavera இவர்களை கடந்து சென்று நின்றது. இருவரும் அதை நோக்கி செல்ல எத்தனித்த போது, அதில் இருந்து இறங்குகிறார் ராஜவேல் . உடன் மூன்று தடியர்கள் . தன் அப்பாவை அங்கு பார்த்த கணேஷுக்கு வியர்த்தது. இருவரும் கைகளை இறுக்கி கோர்த்தபடி திரும்பி ஓட முடியாமல் சிலையாய் நின்றனர். தங்களை நோக்கி வேகமாக அவர்கள் வரும்போது "கடவுளே எங்களை காப்பாத்து" என என்னும்போதே அந்த விசித்திரம் நிகழ்ந்தது.
கணேஷ்-ஆர்த்தி இருவரையும் பார்க்காதது போல் ராஜவேல் அவர்களை கடந்து வேகமாக செல்கிறார். இருவருக்கும் பெரிய ஆச்சர்யம். துணிந்து இருவரும் ராஜவேலை தொடர்ந்து நடக்கின்றனர் குழப்பத்தோடு. தாங்கள் அமர்ந்திருத்த பாறையின் அருகே வந்தவுடன் , அங்கு அவர்கள் கண்ட காட்சி மிரள வைத்தது. இவ்வளவு நேரம் பாறையில் அமர்ந்திருந்தும் திரும்பி பார்க்கவில்லையே என கணேஷ் எண்ணினான். 
அங்கு ஒரு பேருந்து தலை குப்புற கவிழ்ந்து கிடந்தது. இருட்டு அதிகமானதால் அக்கம் பக்கத்தில் இருந்து மக்கள் வந்து சிறுது நேரம் தான் ஆகிறது. காவல் வாகனம் நின்று கொண்டிருக்கிறது. ராஜவேல் வேகமாக சென்று காவல் அதிகாரியிடம் பேசுகிறார். கணேஷ்-ஆர்த்தி இருவரும் ராஜவேலை தொடர்ந்து சென்று பார்த்த போது அங்கு பேருந்தின் அருகே பயணிகள் அனைவருடன் கணேஷ் - ஆர்த்தி இறந்து கிடக்கின்றனர். தகவல் பெற்று ராஜவேல் கணேஷின் சடலத்தை மட்டும் எடுத்து செல்கிறார். தன் உடல் ஆர்த்தியை விட்டு எடுத்து செல்லப்படும் போது கணேஷ் ஆர்த்தியின் கையை இறுக பற்றிக்கொண்டான் . "நல்ல வேலை, நாம் தப்பித்தோம் "என கணேஷ் சிரித்துக்கொண்டே சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டே சாலையில் செல்கின்றனர்......

                                                               

நன்றி
தரன்.