Monday, October 25, 2010

நானும் ஒரு கிறிஸ்தவன்.....

சில பல வருடங்களுக்கு முன்...
காஷ்மீர் மாநிலம்...போர் அபாயம் குறைவான சமயம்..மிகச்சில சிப்பாய்களே எல்லையில்..அச்சமயம் எதிரிகள் ஊடுருவ முயன்ற போது செய்வது அறியாது சற்றே திணறியது நம் படை.எதிரிகளை அங்குள்ள பாலத்தை கடக்க விடாமல் தடுத்தால் கிடைக்கும் நேரத்தில் backup செய்து விடலாம் என்று நினைத்தனர்..அப்போது Major.ரஞ்சித் சிங் தனது உடலில் வெடி குண்டை கட்டிக்கொண்டு குதித்து பாலத்தை தகர்த்தார்...
இந்த கதையை (உண்மையா பொய்யா நு தெரியலங்க..மன்னிச்சுக்கோங்க எங்க அப்பா தான் சொன்னாரு) வேலை நிமித்தமாக பஞ்சாப் சென்ற என் அப்பா கேட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு அப்ப தான் உலகத்துக்கு வந்த எனக்கு "ரஞ்சித்" ன்னு பேர் வச்சாங்க..சரி இதுக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்..பாஷா ரஜினி மாதிரி கண்ணா எனக்கு இன்னொரு பெயர் இருக்கு..."டேனியல்" ..இப்ப தெரிஞ்சிருக்குமே ஆமாங்க நான் ஒரு கிறிஸ்தவன்...

"அய்யா நம்ம நாட்டு சுதந்திரத்துக்கு பாடுபட்டவங்க நிறைய பேர் , ஆனா எனக்கு தெரிஞ்சு அதுல ஒரு கிறிஸ்தவன் கூட இல்லையேன்னு ரொம்ப வருத்தப்பட்டதுண்டு..அப்புறம் கேட்டதும் படித்ததும் வைத்து பாக்கும்போது மிக அதிகமாகவே கிறிஸ்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டார்கள் எனத்தெரிய வந்தது..கொஞ்சம் ரிவர்ஸ் கியர் போட்டு போகலாம்...John the Apostle, later 17th century ல கேரளா வந்தப்ப அவரால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட மதம் கிறிஸ்தவ மதம்...ஒன்னும் ஸ்பெஷல் இல்லைங்க பிற மதம் மாதிரியே அன்பை போதிக்கும் மதம் ...அன்பை "கொடுத்த காசுக்கு அதிகமா கூவுராண்டா கொய்யாலு" அப்படிங்கிற மாதிரி கொஞ்சம் அதிகமாகவே போதித்த மதம்...பிறகு வெள்ளையர்கள் இந்திய வை ஆண்ட போது அவர்களுள் இருந்த சில நல்ல missionaries என்னும் நபர்களால் பள்ளிகள், மருத்துவமனைகள் என ஆரம்பிக்கபட்டு பரவலாகானது கிறிஸ்தவ மதம்...

சரி..இப்ப என்ன அதுக்கு..இதோ வரேன்..வெள்ளைகாரங்க இந்தியா விட்டு போகும்போது நம்ம கலாச்சாரம்,தனித்துவம் இதெல்லாம் ஐஸ் கிரீம் ஆ மாத்தி அத அவனோட கோன் ல போட்டு அடில ஒரு ஓட்டையும் போட்டுட்டு போய்ட்டான்..நம்ம கலாச்சாரம் எல்லாம் ஒழுகி இப்ப வெறும் கோன் எ வச்சு கடிசுகிட்டு இருக்கோம்...அப்படி நம்ம தனித்துவம் இழந்து வெள்ளையனோட சாயல் அதிகமா படிந்த ஒரு மதம் கிறிஸ்தவ மதம்..அனைத்து மனிதர்களிடமும் போலித்தனம் மேலோங்கித்தான் இருக்கு ..இருந்தாலும் இம்மதத்தின் சடங்குகள் , சம்பிரதாயங்கள் எல்லாம் அம்மதம் கூறும் நல்ல விஷயங்களை விடுத்து வேறு வழியில் தான் சென்று கொண்டிருக்கிறது ..
நம்ம தனித்துவம் விட்டு கொடுக்காம இருந்ததால தான் வெள்ளைகார தேவதையான "எமி ஜாக்சன்" கூட மதராசபட்டினத்தில் துணி துவைக்கிற இந்தியனை லவ்வினாங்க...ஆனா இணைக்கு அந்த மதத்தோட பயணிக்கிற முறையில் என்னால், வெள்ளைக்கார சாயம் அதன் மேல் பூசப்பட்டதை உணர முடிகிறது ..

1). முதலில்...முடியல...கல்யாணம் தாங்க..அதுல மாப்பிள்ளைக்கு costume கோட் சூட்..மே
மாசம் சென்னை ல கல்யாணம் நடக்கும்..ஆனாலும் மாப்பிள்ளை கோட் சூட் ல தான்
இருப்பாரு...நமக்கு ஏங்க இந்த விளம்பரம் ..இப்ப எல்லாம் மத்த மதத்துல கூட கோட் சூட்
போடுறாங்க..ஆனா முதலில் நம்ம தமிழ் காலச்சாரம் இருக்கவே இருக்கு...பொண்ணுக்கு
போடுவாங்க ஒரு டிரஸ்..அது தலைல இருந்து ரெண்டு மூணு மீடர் நீளத்துக்கு ஒரு
துணி..அத ரெண்டு சின்ன பிள்ளைங்க வேற பிடிச்சுக்கிட்டே வரும்...எதோ ஆவி சினிமா
பாக்குற மாதிரியே இருக்கும்...வெள்ளையா!!!!

2). இன்னொரு கொடுமை பெயர்..எல்லாம் ஆங்கில பெயர்கள்...என் பேர்ல கூட இருக்கும்...
Fernandez -- பேருதான் இப்படி ஆனா பய இங்கிலீஷ் படத்த தமிழ் dubbing ல தான்
பாப்பான்...அப்படியே இங்கிலீஷ் ல பாத்தாலும் பாத்துட்டு வெளிய
வந்து பாருடா டேய் அந்த ஊர்ல சின்ன பசங்க கூட இங்கிலீஷ் பேசுறானுக டா
ன்னு புலம்புவான்..
Angel --- இந்த பேரோட உண்மையான அர்த்தம் அந்த பொண்ணுக்கு பேர் வச்சவங்களுக்கு
தெரிய பெரும்பாலும் வாய்பிருக்காது.இதுல இன்னொரு கொடும நிறைய வீட்ல
நாய்களுக்கு கூட இங்கிலீஷ் பேர்தான்...என்னோட colleague ஒருத்தன் அவன் வீட்டு
நாய் பேரு "Dani".நல்ல வேல கலர் difference இருக்கு அது வெள்ளை நான் கருப்பு..

3). அப்புறம் இந்த சினிமால பதிரியார்களா வருவாங்க..அவுங்களோட dialogues "my son.." "dont
worry my child.." "God bless you.." என்ன பண்றது யாரு இதெல்லாம் ஆரம்பிச்சு
வச்சாங்கன்னு தெரியல...

இப்படி ஒரு நல்ல மதத்துல இருக்க நல்ல விஷயங்கள விட்டுட்டு, அது சொல்ல வர கருத்த விட்டுட்டு இப்படி போயிட்டு இருக்குகாங்க கிறிஸ்தவர்கள் ...இதெல்லாம் யார் கேக்குறது .கேட்டா My son ன்னு சொல்லுவானுக..ஏன் வம்பு...என்னால முடிஞ்சா வரை என் தாய் மொழியை மறக்காமல் கடைசி வரை வாழ்ந்துட்டு போறேன்...வரட்டா நெக்ஸ்ட் மீட் பண்றேன் ...

6 comments:

  1. / அவர்களுள் இருந்த சில நல்ல missionaries என்னும் நபர்களால் பள்ளிகள், மருத்துவமனைகள் என ஆரம்பிக்கபட்டு /

    இது ரொம்ப முக்கியமானது. கல்வி பரவ கிருஸ்துவ மிஷனரிஸ் பங்கு மிகப் பெரியது. நம் பள்ளியே நமக்கு ஒர் உதாரணம்.

    / இம்மதத்தின் சடங்குகள் , சம்பிரதாயங்கள் எல்லாம் அம்மதம் கூறும் நல்ல விஷயங்களை விடுத்து வேறு வழியில் தான் சென்று கொண்டிருக்கிறது /

    அப்படியா ? இந்தியாவில் பின்பற்றப்படும் கிறிஸ்துவத்தில் சாதியமும் இருக்கிறது என்று கேள்வி பட்டது உண்டு! இது வெள்ளைக்கார சாயமல்ல, இந்து மத சாயம் :(

    / ...வெள்ளையா!!!! /
    :) :)

    / பாருடா டேய் அந்த ஊர்ல சின்ன பசங்க கூட இங்கிலீஷ் பேசுறானுக /
    :) :)

    / அது வெள்ளை /
    :) அது வெள்ளை. நம்மை பத்தியோ, சொல்லத்தேவையே இல்லை :) :)

    / வரட்டா நெக்ஸ்ட் மீட் பண்றேன் /
    ஆவலுடன் காத்திருக்கிறோம் !

    ReplyDelete
  2. could see a great improvement in ur writings .......nalla iruku... iinnum ethirparkiren!

    ReplyDelete
  3. திரும்பவும் ஒரு 'ரிபீட்' வாசிப்பு வாசித்து விட்டு புன்னகைத்தேன் ! அருமையான எழுத்து பிரவாகம்!
    தொடரு நண்பா!

    ReplyDelete
  4. Vaarthaigal indri thavikkiren oru comment poduvadharkku...

    Thangalin vaarthai nadai miga arumai,
    Adhulayum anganga vaigai puyalin touch,,,
    Hmmm... Unga baasheyla sollanum naa,,,
    Pinni pedal eduthirukeenga ponga :) :) :)
    Thodarattum.........

    ReplyDelete