Tuesday, January 5, 2010

நட்புத் தோல்வி...

பரீட்சைத் தோல்வி, காதல் தோல்வி, வியாபாரத் தோல்வி இவைகளின் வரிசையில் இவைகளை போல வேதனை தரக்கூடியது நட்புத் தோல்வி....
" A Friend is a person who knows you well,with whom you can have affection and trust, and with whom you can feel the comfortableness..."


மேற்கூறியவைகளில் ஒன்று குறை படும்போதோ அல்லது அவைகளுக்கு அப்பாற்பட்டு சில குறைப்படும்போதோ அடைவது நட்புத் தோல்வியா?
தேடிச் சென்று அடையகூடியது அல்ல நட்பு, நட்பு என்கிற உணர்வு இரு மனிதர்களிடையே, இருவருக்கும் மற்றவர் பால் தோன்றக்கூடியது.இவ்வுணர்வு ஒருவரிடம் குறைப்படும்போது மற்றவர்க்கு அது நட்புத் தோல்வியா? அல்லது அவ்வுணர்வு தான் மற்றவரிடம் கொண்டது போல் மற்றவர் தன்பால் கொள்ளாததை அறிய வரும்போது அடைவது நட்புத் தோல்வியா?

மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியும் நிகழும் நிகழ்வுகளை நன்கு உணரக்கூடிய பருவம் (Maturedness) எய்தும் போது, அவனிடம் அன்பு எடை போட்டு உபயோகப் படுகிறது... அன்பு செலுத்தும் முன் இதயத்திற்கு முன்பு மூளையைத் துணையாகக் கொள்கிறான்...இது சரியா தவறா என்கிற வாதத்தை விட, அத்தகைய மனிதனுக்கு தோல்விகள் பகையாளிகள் ஆகின்றன என்பது ஒரு நிதர்சனமான உண்மை. இவ்வாறில்லாமல் தன்னைப் பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் உரிமையோடும் நம்பிக்கையோடும் மற்றவரிடம் பகிரும் போது, மற்றவர் தன்னையல்லாமல் வேறொருவரிடம் அங்ஙனம் பழகுவதை உணருவது நட்புத் தோல்வியா ?
இல்லை தான் நண்பராக நினைப்பவரிடம் செலுத்தும் அன்பில் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் எட்டிப்பார்க்கும் போது அடைவது நட்புத் தோல்வியா?

மேற்கூறிய அல்லது மேற்பிதற்றியவைகளின் மூலம் அடைவது நட்புத் தோல்வியா? அன்பை திரும்ப பெறாமல் கொடுத்துகொண்டே இருக்க நட்பால் ஆகுமா ? அங்ஙனம் நிகழ்ந்தால் அது நட்பாகுமா ?
மனிதனுக்கு எட்டாதவைகள் பல உண்டு என்பார்கள், அவற்றுள் ஒன்றாய் இதை நான் எடுத்துக்கொள்கிறேன்....

5 comments:

  1. வலைப்பதிவு வரவேற்கிறது.

    நல்ல பதிவு தரன்! வாழ்த்துக்கள்.

    எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்; வந்தேவிட்டது வலைப்பதிவு! வாழ்த்துக்கள்!

    தரனே வருக!
    மென்மேலும் நல்ல எழுத்து தருக!

    ReplyDelete
  2. நட்பு தோல்வி - தோல்வியில் ஆரம்பித்த ஒரு வெற்றி என்றே சொல்லணும் :-) உனக்குள்ள இவ்வளவு தமிழா, கலக்குற!! என்ன ஒரு தடவை படிச்சதும் புரியல :-) (My mistake :- ) ) நல்ல ஆரம்பம் , தொடர்ந்து எழுது , கொஞ்ச நாளைக்கு வாரத்துக்கு ஒன்னாச்சும் முயற்சி பண்ணு :-) அப்புறம் அதுவா பழகிடும் வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  3. thambi natpu thozhviyza.. ethnala ipdi oru post...vera thozhvina paravala...cinema dialogue mathri natpuku thozhvi kedayathu nanmbargal than thorpargal... :)

    ReplyDelete
  4. hello wow,,,ningal ippadiellam ezthuvingala??

    romba nalla iruku..
    there was a "silly" expression that IT people r use robots n no other touts in mind...chumma Systemkuda irukangal ..(here they say that )
    u broke that RULE>.

    Great buddy

    (nxt time naan tmila type seiya muyarchi seirean...)

    ReplyDelete