Monday, May 3, 2010

சுறா - திரை விமர்சனம்

உலகத் தமிழ் மக்கள் ஆவலாய் எதிர் பார்த்த இளைய தளபதியின் 50 வது படம். மக்களின் எதிர்பார்ப்பை சிறிதும் குலைக்காமல் பூர்த்தி செய்துள்ளது சுறா..

சுறா என்னும் பெயருக்கேதாற்போல் சினிமா என்னும் கடலை விஜய் ஆளப்போவது உறுதி...பல இடங்களில் வழக்கம் போல் விஜய் மிக அழகாய்த் தெரிகிறார்..ஆண் சுராவிற்கு ஏத்தாற்போல் பெண் சுறாவான தமன்னாவும் போட்டி போட்டு நடித்துள்ளார்..."மீன் செதில்ஸ்" off to you tamanna.
படத்திற்கு பெரிய பலம் கதை...வசந்த பாலன், பாலா,கௌதம் மேனன் போன்றோர்கள் தமிழ் சினிமாவை சிதைக்கும் போது, SP ராஜ்குமார் போன்ற திறமை சாலிகள் இருக்கும் போது நம்மால் நிம்மதி பேரு மூச்சு விட முடிகிறது ...

இது தான் வதை ச்சி கதை

யாழ் என்னும் குப்பத்தை சார்ந்த, கலர் கலராய் தினம் சட்டை போடும் மீனவன் கதாநாயகன் அதாவது நம்ம சுறா. அவர் பெரும் அதே தான்...மீனவ மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது தான் தனது லட்சியம் என வாழ்பவர். லட்சத்தில் ஒருவன் தான் இம்மாதிரி குணங்களுடன் இருப்பார் என பாதிரியார் ராதா ரவி சொல்லும் போது நமது ரோமங்கள் எல்லாம் குத்திட்டு நிற்கின்றன...
தனக்கு திருமணம் வேண்டாம் என வாழும் சுராவின் கடலுக்குள் ஒரு gold fish நுழைகிறது....சுராவை காதலிக்கிறது அந்த மீன்....இவ்விருவருக்கும் இடையிலான காதல் கட்சிகள் மிக அருமை.... gowtham menon,AR murugadoss,manirathnam உங்களுக்கு கஷ்ட காலம் தான் இனி...SP ராஜ்குமார் வருகிறார்..மிக நேர்த்தியான இரண்டு காட்சிகளில் காதல் பிறக்கிறது....ஆஹா சபாஷ் ..

படத்தின் பெரிய ட்விஸ்ட் வில்லனுக்கு அந்த குப்பத்து இடம் தேவை படுகிறது.....ஆந்திர ரியல் எஸ்டேட் பணக்காரர்களை எல்லாம் சாதரணமாக கொள்ளும் வில்லனால் சுராவிற்கு வலை போட முடியவில்லை ...முடியுமா...முடியாது ...சிக்கித் திணறுகிறார் ...ஒரு கட்டத்தில் விஜய் கொல்லப்பட துக்கம் தொண்டையை அடைக்கிறது படம் பார்ப்பவர்களுக்கு...ஐயோ இனிமே காமெடி scenes இல்லையேன்னு திரைஅரங்கில் உருண்டு புலம்புகிறார்கள் மக்கள்....ஊரே கொளுத்தப்பட சிலையின் அடியில் இருந்து உயிரோடு வருகிறார் சுறா...

வில்லனிடம் சவால் விடுத்து அவரின் கடத்தல் பொருள்களை புஸ்வானம், ராக்கெட் போன்ற சக்தி வாய்ந்த ஆயுதங்கள் கொண்டு அபேஸ் செய்கிறார்.அடுத்த காட்சியில் 100 கோடி ருபாய் பணத்துடன் குப்பம் திரும்புகிறார் audi கார்-இல்..வில்லனின் எதிர்ப்புகளை தாண்டி குப்பத்து மக்களுக்கு வீடு கட்டி தருகிறார்..சுபம்...

அனல் பறக்கும் வசனங்கள், புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகள்,விசில் பறக்கும் நடனங்கள் என பறந்து உருண்டு பிரண்டு அசத்தி இருக்கிறார் விஜய்...

படத்தின் +
கதை ,திரைக்கதை, வசனம்,பாடல்கள்,ஒளிப்பதிவு,நடனம்,சண்டைக்காட்சிகள்,படத்தொகுப்பு,இயக்கம்,தயாரிப்பு.மற்றும் பல...

படத்தின் -
பெரிதாய் சொல்வதற்கில்லை...

படத்தைப் பற்றி பத்திரிக்கைகள்...
- An adrenaline charged and testosterone driven movie.. ----SanFrancisco Chronicle
- Another Avatar ------- Washington Post
- Its a great inspiration for my writings ---- Dan Brown
- A thrilling and pleasant experience for the people --- The Hindu
- Movie which brings people to the edge of the seat ---- The christian and The Muslim

Post Release news:
* படத்தை 3D இல் வெளியிடக்கோரி திரு.ராமநாராயாணன் மனு...
* படத்தை அனைத்து உலக மொழிகளிலும் வெளியிட தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்கு ஒசாமா ச்சி ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்...
* SA சந்திரசேகரனின் வீட்டில் கல்வீச்சு....

மொத்தத்தில் சுறா திமிங்கலம்....

நன்றி
தரன்....

1 comment:

  1. / ஐயோ இனிமே காமெடி scenes இல்லையேன்னு திரைஅரங்கில் உருண்டு புலம்புகிறார்கள் மக்கள் /

    :-) :)

    / வில்லனிடம் சவால் விடுத்து அவரின் கடத்தல் பொருள்களை புஸ்வானம், ராக்கெட் போன்ற சக்தி வாய்ந்த ஆயுதங்கள் கொண்டு அபேஸ் செய்கிறார் /

    :-) :)

    :) அருமையான திரை விமர்சனம். விரைவில் ராவணனை எதிர் பார்க்கலாம்

    ReplyDelete